October 21, 2020

மனதை நெகிழச்செய்யும் முருகன் பக்திப் பாடல் ஆல்பத்தை வெளியிட்ட நடிகர் சூர்யா!!!

பாடகரும் நடிகருமான க்ரிஷ் தமிழ்க் கடவுள் முருகனைப் பெருமைப்படுத்தும் வகையில் ‘அறுபடை வெற்றி வேலா’ என்ற ஆறு பாடல்கள் அடங்கிய ஆல்பத்தை உருவாக்கி உள்ளார். முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றைப் பாடல் தலைப்புகளாகக் கொண்டு ஆறு பாடல்களைப் பாடியும் இவரே இசை அமைத்துள்ளார். மேலும் இந்தப் பாடலை இவரே தயாரித்தும் உள்ளார். அனைத்துப் பாடல் வரிகளையும் மதன் குமார் என்பவர் எழுதி உள்ளார். மேலும் கிரிஷ் உடன் பிரியா மாலி, ஷிவ்யா, சாய் சாதனா ஆகியோர் இணைந்து இந்த ஆறு பாடல்களைப் பாடி உள்ளனர்.

இந்தப் பாடலில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஜெயம் ரவியும், இரண்டாவது லுக் போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபுவும் வெளியிட்டனர். இந்நிலையில் தற்போது இந்தப் பாடலை நடிகர் சூர்யா தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்தப் பாடல் சோனி மியூசிக் சவுத் யூடியூப் பக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

%d bloggers like this: