November 25, 2020

கமலுடன் இணையும் மாஸ்டர் இயக்குநர்!!!

2017ஆம் ஆண்டு மாநகரம் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படமே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து பிறகு கடந்த 2019ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் விஜய்யின் பிகில் படத்துடன் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டதால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை இன்று மாலை வெளியிடுவதாக நேற்று தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தற்போது அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசனின் 232வது படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்திற்குப் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் லோகேஷ் “எவனென்று நினைத்தாய்“ என்ற ஹேஸ்டேகைக் குறிப்பிட்டிருப்பதால் இதுவே தலைப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்திற்கு மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.


%d bloggers like this: