November 25, 2020

மீண்டும் இணையப்போகும் விக்ரம் பிரபு லக்ஷ்மி மேனனின் புதிய திரைப்படம்!!!

2012ஆம் ஆண்டு இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கும்கி. இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் ஆகியோர் அறிமுக நாயகர்களாக இணைந்து நடித்திருந்தார்கள். இது பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைத் தொட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த ஜோடி ஒரு புதிய திரைப்படத்திற்காக இணையப் போகிறார்கள் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

செவாலிய சிவாஜி கணேசனின் பேரனும் பிரபுவின் மகனும் ஆகிய விக்ரம் பிரபு கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இவர் இந்த படத்திற்காக மூன்று விருதுகளை பெற்றுள்ளார். 2012ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் விருது, சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட சிறப்பு விருது மற்றும் சிறந்த அறிமுக நடிகருக்கான சைமா விருது ஆகிய மூன்று விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார். கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளைக்கார துரை, இது என்ன மாயம், வாஹா, வீர சிவாஜி, சத்ரியன், நெருப்புடா, 60 வயது மாநிறம், துப்பாக்கி முனை, வானம் கொட்டட்டும், அசுரகுரு ஆகிய படங்களில் இவர் நடித்திருக்கிறார். தற்போது மணிரத்னம் அவர்களின் தயாரிப்பு, இயக்கம் மற்றும் எழுத்தில் பொன்னியின் செல்வன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் இவர் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை முத்தையா அவர்கள் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி தொடங்கும் எனவும் இந்த திரைப்படத்தை நேரடியாக ஓ டி டி தளத்தில் வெளியிடப் போவதாகவும் படக்குழுவினர் அறிவித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு தற்காலிகமாக “பேச்சி ” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய திரைப்படத்தில் விக்ரம் பிரபுவோடு மீண்டும் லட்சுமி மேனன் இணைந்து நடிக்க இருப்பதாக செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

%d bloggers like this: