October 21, 2020

நாற்பது ஆண்டுகளை கடந்த வசந்த கால பறவை!!!

பிரம்மாண்ட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சு மோன் அவர்களின் தயாரிப்பில் வசந்த கால பறவை திரைப்படம் வெளிவந்து நாற்பது ஆண்டுகளை கடந்து விட்டது. இதனை கே.டி.குஞ்சுமோன் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்து இருக்கிறார்.

தொண்ணூறுகளில் பிரம்மாண்ட தயாரிப்பாளர் என்று பெயர் பெற்ற கே.டி.குஞ்சுமோன் அவர்கள் தமிழில் முதன் முதலாக தயாரித்த திரைப்படம் வசந்த கால பறவை. 1991ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை இயக்குநர் ஏ.என்.பவித்ரன் அவர்கள் எழுதி இயக்கி இருந்தார். தேவாவின் இசையமைப்பில் கவிஞர் வாலி அவர்கள் பாடல் வரிகளை எழுதி இருந்தார்.

இந்த திரைப்படத்தில் ரமேஷ் அரவிந்த், மெகா ஸ்டார் சரத்குமார், சார்லி, கவுண்டமணி, சத்யப்ரியா, வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், கிட்டி, கே.கே.சௌந்தர், மண்ணாங்கட்டி சுப்ரமணியம், கிருஷ்ணமூர்த்தி, நாகேந்திரன், ஜெயபால், சி.கே.எஸ்.உமா மகேஸ்வரி, சி.ஆர்.சரஸ்வதி, நாகமணி, ராஜன். பி.தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் 1991ஆம் ஆண்டு செப்டம்பர் 18 அன்று வெளியிடப்பட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் மெகா ஸ்டார் சரத்குமார் அவர்களை கதாநாயகனாக வைத்து சூரியன் படத்தை இவர் தயாரித்தார். அதுவும் இவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. காதலன், ஜென்டில்மேன் போன்ற அடுக்கடுக்காக பல பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வெற்றி அடைந்திருக்கிறார்.

தற்போது இவர் புதிதாக ஜென்டில்மேன் ஃபிலிம் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் இன்று இவரது முதல் தமிழ் திரைப்படம் வசந்த கால பறவை வெளிவந்து நாற்பது ஆண்டுகளை கடந்து விட்டதை தனது டிவிட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்து இருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.டி.குஞ்சுமோன் அவர்கள் தயாரிப்பில் களம் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: