மக்களை மகிழ்விக்கும் மன்னன் யோகி பாபு

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக யோகி பாபு விளங்குகிறார். முதலில் திரைப்படங்களில் சிறு சிறு காட்சிகளில் தோன்றிய யோகி பாபு “மான் கராத்தே” படத்தின் மூலமாக ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராகத் தோன்றினார். பிறகு விஜய், அஜீத், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் யோகிபாபு. கோல மாவு கோகிலா, தர்ம பிரபு ஆகிய படங்களில் முன்னணி கதாபாத்திரத்திலும் நடிகராக நடித்துள்ளார்.
தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்கள், நடிகைகள் தொடங்கி இயக்குநர், இசையமைப்பாளர், நகைச்சுவை நடிகர்கள் என அனைவரின் பிறந்த நாட்களையும் காமன் டிபி வெளியிட்டுக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது யோகி பாபுவிற்கும் காமன் டிபி வெளியிட்டுள்ளனர்.
யோகி பாபு நாளை ஜூலை 22 ,தனது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார். இதற்கான காமன் டிபியை பாடலாசிரியர் விவேக் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த டிபியில் மக்களை மகிழ்விக்கும் மன்னன் என யோகிபாபுவைப் புகழ்ந்துள்ளார்.இந்த காமன் டிபியை முத்துக்குமார் உருவாக்கி உள்ளார். இதைத் தொடர்ந்து பல ரசிகர்களும், பிரபலங்களும் இந்த காமன் டிபியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களின் வாழ்த்துக்களை யோகி பாபுவிற்குத் தெரிவித்து வருகின்றனர்.
This great man is an inspiration for millions. Happy to Release the Common DP for this humble and handsome star ? @iYogiBabu Birthday Celebration of #YogiBabu brother ??❤️
Design by – @sr_muthukumar
Organised by – @FXSHARAN#HBDYogiBabu #YogibabuBirthdayCDP pic.twitter.com/ZVBAVHFw6q
— Vivek Lyricist (@Lyricist_Vivek) July 21, 2020