November 25, 2020

75 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்த தெறி பாடல்

அட்லி – விஜய் கூட்டணி முதல் முறையாக இணைந்த திரைப்படம் தெறி. இந்த படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா , ராதிகா, மஹேந்திரன், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை கலைபுலி தாணுவின் “வீ கிரியேஷன்” தயாரித்திருந்தது. . இந்த படம் 2016 இல் கோடை விடுமுறையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. புலி படத்திற்குப் பிறகு விஜய்க்கு இப்படம் மாபெரும் வெற்றிப் படமாகவும் அமைந்தது.

இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்த படம் ஜீவிக்கு 50 ஆவது படமாகும். ஜீவி இசையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்தின் வெற்றிக்குப் பக்க பலமாக இருந்தது. இந்தப் படத்தின் தனியிசைப்பாடல் யூடியூப்பில் 300 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் தெறி படத்தின் முதல் பாடலான ஈனா மீனா டீக்கா பாடலில் விஜய் மற்றும் நைனிகாவின் கியூட்டான காட்சிகள் பல ரசிகர்களையும், குழந்தைகளையும் கவர்ந்தது. தற்போது இந்த பாடல் யூடுயூபில் 75 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து உள்ளது. இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

%d bloggers like this: