December 3, 2020

இயக்குநர் பாரதிராஜா அவர்களை வாழ்த்தும் கயல் தேவராஜ்!!!

தமிழ் திரையுலகில் “இயக்குநர் இமயம்” என்று அனைவராலும் அன்போடும் மரியாதையுடனும் அழைக்கப்படுபவர் தான் இயக்குநர் பாரதிராஜா அவர்கள்.

தனது கலை வாழ்க்கையில் இயக்கம் மட்டுமின்றி கதையாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளில் தன் தடம் பதித்து வேரூன்றி நிற்பவர். இத்தகைய பங்களிப்பினை பாராட்டி 2004ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு “பத்மஸ்ரீ” விருதை வழங்கி கௌரவித்தது.

1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ந் தேதி அன்று ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ் பதாகையின் கீழ் எஸ்.ஏ.ராஜ்கண்ணு அவர்களின் தயாரிப்பில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் இயக்குநர் பாரதிராஜா அவர்கள் இயக்கிய திரைப்படம் தான் “கிழக்கே போகும் ரயில்”.

இதில் நடிகர் சுதாகர் கதையின் நாயகனாக நடித்தார்.நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் இத்திரைப்படத்தில் தான் புதுமுக நாயகியாக அறிமுகமானார். இத்திரைப்படம் 365 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடி சாதனைப் படைத்தது.

இந்த திரைப்படம் வெளிவந்து இன்றோடு 42 ஆண்டுகள் முடிவடைந்ததை ஒட்டி நடிகர் கயல் தேவராஜ் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துப் பதிவினை பகிர்ந்துள்ளார்.

அதில் பாரதிராஜா அவர்களே இன்று ஆகஸ்ட் 10, நீங்கள் இயக்கிய

“கிழக்கே போகும் ரயில்” படம் திரைக்கு வந்து (10-8-1978) 42 ஆண்டுகள் நிறைவடைந்த நாள். வாழ்த்துகள் சார் என்று கூறியுள்ளார்.

%d bloggers like this: