வெளியானது காவல் துறை உங்கள் நண்பன் படத்தின் டிரெய்லர்!!!

பி.ஆர்.டாக்கிஸ் கார்ப்பரேஷன் மற்றும் வொய்ட் மூன் டாக்கிஸ் பேனரின் கீழ், ஆர்.டி.எம் இயக்கத்தில், ராஜ பாண்டியன், பாஸ்கரன், சுரேஷ் ரவி ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில், சுரேஷ் ரவி, ரவீனா ரவி, மைம் கோபி, ஆர்.ஜே.முன்னா ஆகியோரின் நடிப்பில் வரும் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் காவல் துறை உங்கள் நண்பன். இந்தப் படத்தின் நாயகி ரவீனா பல முன்னணி கதாநாயகிகளுக்கும் பின்னணி குரல் கொடுப்பவர். இவர் தற்போது கதாநாயியாக களம் இறங்கி இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
ஆதித்யா மற்றும் சூர்யா ஆகியோர் இணைந்து இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளனர். கே.எஸ்.விஷ்ணுஸ்ரீ ஒளிப்பதிவில், வடிவேல் மற்றும் விமல் ராஜ் எடிட்டிங்கில் இந்தப் படம் தயாராகி இருக்கிறது.
இந்தப் படம் வெளியாக இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் தற்போது இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. மாதவன் இந்தப் படத்தின் டிரெய்லரை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.