December 3, 2020

லோகேஷ் கனகராஜ் வெளியிடும் உலகநாயகனின் பாடல்!!!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் 1988ஆம் ஆண்டு நடிகை அமலாவுடன் இணைந்து நடித்து 150 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் தான் “சத்யா”.

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் அறிமுக இயக்குநராக இயக்கினார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பதாகையின் கீழ் கமல்ஹாசன் அவர்களும் சந்திர ஹாஸன் அவர்களும் இணைந்து தயாரித்தனர். இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தவர் இசைஞானி இளையராஜா அவர்கள்.

1985ல் ஹிந்தி மொழியில் வெளிவந்த ‘அர்ஜூன்’ திரைப்படத்தின் ரீமேக்காகும். தெலுங்கு மொழியிலும் ‘சத்யா’ என்ற பெயரிலேயே டப் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.

உலகநாயகனின் 61 ஆண்டுகால கலைப்பயணத்தை கொண்டாடும் வகையில் “சத்யா” திரைப்படத்தின் பாடலை மீண்டும் உருவாக்கியுள்ளனர். இதன் கருத்து மற்றும் இயக்கம் அரவிந்த் ஸ்ரீதர். நடிகர் குரு ஸ்மரனின் நடிப்பில் சசிகுமார் அவர்கள் தயாரித்துள்ளார்.

திரைப்பட நிருபர் ராஜசேகர் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் உலகநாயகன் என்ற ஹேஷ்டேகின் மூலம் குறிப்பிட்டு, கமல்ஹாசன் அவர்களின் “சத்யா” திரைப்படத்தின் பாடலை மீண்டும் உருவாக்கியுள்ளனர். இதை மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் அவர்கள் திங்கட்கிழமை வெளியிடவுள்ளார் என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளையும் மகிழ்ச்சியயையும் பகிர்ந்து வருகின்றனர்.

%d bloggers like this: