November 1, 2020

கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் !!

கமல்ஹாசனும், விஜய் சேதுபதியும் நேரலையில் கலந்துரையாடிய காணொளி (மே 2) நேற்று மதியம் 12 மணியளவில் தொடங்கி 1.30 மணிவரை நேரலையில் ஒளிபரப்பானது. விஜய் சேதுபதியின் கேள்விகளுக்குக் கமல்ஹாசன்ஹாசன் பதிலளித்தார்.

அதில், ”தன்னார்வலர்களை அரசு ஏன் இந்த இக்கட்டான காலத்தில் நிராகரித்தது என்ற விஜய் சேதுபதியின் கேள்விக்குக் கமல் ஏற்றுக்கொண்ட மாநிலங்கள் நல்ல நிலைக்குத் திரும்பி வருகின்றனர். இது சுயநலமற்ற அரசியலாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதே போல ஏன் அரசியலுக்கு வருவதை திரைத்துறை மூலமாகச் சொல்லவில்லை என்ற கேள்விக்கு ’அவன்’ என்ற ஒருமை சொல் மாறி ’அவர்’ என்ற சொல் வரும்  காலம் வரை காத்திருந்தேன் என்று பதிலளித்துள்ளார். 

உங்களது பேச்சும் எழுத்தும் புரியவில்லையே என விஜய் சேதுபதி கேட்கக் கலைஞரும், அவ்வையாரும், பாரதிதாசனும், பாரதியாரும் புரிய வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்திருந்தால் அவர்கள் திரைத்துறை பாடல்களை மட்டும் தான் எழுதியிருப்பார்கள். அப்படிப் புரியவில்லை என்றாலும் விஜய் சேதுபதி எடுத்துச் சொல்லிவிடுவார் என்று கூறினார்.

இதையும் படிங்க : விஜய் சேதுபதியால் பிரபல ஹீரோ மீண்டும் இயக்குநர் ஆகிறார்!!

தன் இளமைக்காலம், நாடகம், நடனம், திரைத்துறை, நண்பர்கள், அரசியல் எனப் பேசப்பட்ட ஒன்றரை மணி நேர உரையாடலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ராஜ் கமல் பிலிம்ஸ் டிவிட்டர் மூலம், விஜய் சேதுபதி , சினிமாபையன் மற்றும் டர்மெரிக்  மீடியா ஆகியோருக்கு பகிரப்பட்டுள்ளது.

1 thought on “கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் !!

Comments are closed.

%d bloggers like this: