October 29, 2020

ஐந்து மொழிகளில் வெளியான காஜல் அகர்வாலின் புதிய படத்தின் டீசர்!!!!

காஜல் அகர்வாலின் புதிய திரைப்படமாகிய மொசகள்ளு திரைப்படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது.

மொசகள்ளு என்றால் ஏமாற்றுக்காரன் என்று பொருள் தரும். இந்த திரைப்படம் ஐடி துறையில் நடைபெற்ற மிகப்பெரிய குற்ற சம்பவத்தின் கதையை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் விஷ்ணு மஞ்சு, காஜல் அகர்வால் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளிவர இருக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்குநர் ஜெஃப்ரி ஜி சின் அவர்கள் எழுதி இயக்குகிறார். விஷ்ணு மஞ்சு அவர்கள் ஏ.வீ.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃப்ரேம் ஃபேக்டரி நிறுவனங்களின் மூலம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

சாம் சி எஸ் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தில் விஷ்ணு மஞ்சு, காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி, ருஹி சிங், நவீன் சந்திரா, நவ்தீப், கர்மா மேக் கெய்ன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் டீசரை பார்க்கும்போது நூதன முறையில் பன மோசடி செய்வது குறித்த கதை போல தெரிகிறது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டில் தொங்கியது. இதன் வெளியீடு இந்த வருடத்தின் முற்பகுதியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணத்தால் இதன் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

%d bloggers like this: