November 30, 2020

நடந்து முடிந்த காஜல் அகர்வால் திருமணம்!!! இணையத்தில் வைரலான புகைப்படங்கள்!!!

பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த காஜல் அகர்வால் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். க்யூன்! ஹோ கயா நா திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். பின்னர் லக்‌ஷ்மி கல்யாணம் திரைப்படத்தின் தெலுங்கு திரையுலகிலும், பழநி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி  என பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். காஜல் அகர்வால். இதே போல தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இவர் தற்போது மொசகல்லு, ஆச்சார்யா ஆகிய தெலுங்கு படங்களிலும், மும்பை சாகா என்ற ஹிந்தி படத்திலும், ஹேய் சினாமிகா, இந்தியன் 2, பேரிஸ் பேரிஸ் ஆகிய தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் வெங்கட் பிரபு இயக்கும் லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையே காஜல் அகர்வாலின் நிச்சயதார்த்தாம் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதனை முன்னிட்டு மருதாணி போட்டுக்கொள்ளும் மெஹந்தி ஃபங்ஸன் நிகழ்ச்சியில் காஜல் அகர்வால் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் நேற்று வெளியானது. இதற்கிடையே சற்று முன் காஜல் அகர்வாலுக்கும் தொழிலதிபரான கௌதம் கிச்சுலுவிற்கும் திருமணம் நடந்து முடிந்தது. காஜல் அகர்வாலின் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. காஜல அகர்வால் வெட்டிங் என்ற ஹேஸ்டேகையும் அவரின் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

%d bloggers like this: