October 21, 2020

“க/பெ ரணசிங்கம்” திரைப்படத்தின் தாக்கத்தை ஏற்படுத்தும் ‘பறவைகளா’ பாடல் வெளியானது!!!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெ.விருமாண்டி அவர்களின் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் க/பெ.ரணசிங்கம்.

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ‘பூ’ ராம், ரங்கராஜ் பாண்டே, வேல ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் அவர்கள் இசையமைத்துள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

கொரோனா தொற்றின் காரணமாகத் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் படம் ஓடிடி தளமான ஜீ ப்ளக்ஸில் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வைரமுத்து அவர்களின் வரிகளில் இடம்பெற்ற ‘அழகிய சிறுக்கி… அருவா மூக்கி…’, என்ற பாடலும் ‘புன்னகையே’ என்ற பாடலும் சமீபத்தில் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது.

அதனை தொடர்ந்து, வைரமுத்து அவர்களின் அற்புத வரிகளில், தாக்கத்தை ஏற்படுத்தும் ஜிப்ரான் இசையில், மணிகண்டன் குரலில், சாதி மத பேதமற்று, உற்றார் உறவினர் நண்பர்கள் சுக துக்கமின்றி, குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல ஓடி கொண்டிருக்கும் “குடி பெயர்ந்தோருக்கு” எங்கள் சமர்ப்பணம்! என்று கூறி ‘பறவைகளா.. பறவைகளா.. பசியெடுத்த பறவைகளா.. பால்வெளியில் இரைதேடும்… பாலைவனப் பறவைகளா….” என்ற 3வது பாடலை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பாடலை, தங்கள் குடும்ப வறுமையை தீர்க்க கடல் தாண்டி வேலைக்கு செல்லும் இந்தியர்களுக்கும், அவர்கள் நினைவில் ஏங்கி தவிக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் சமர்ப்பணம் செய்துள்ளனர் படக்குழுவினர். தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இப்பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. வைரமுத்து அவர்களின் வரிகளையும் ஜிப்ரான் இசையையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

%d bloggers like this: