November 30, 2020

ஜூனியர் என்.டி.ஆரின் பீம் தோற்றம் நாளை மறுநாள் வெளியாகிறது

ராஜமெளனி என்றாலே பிரம்மாண்டத்துக்கும், கிராபிக்ஸ்க்கும் பேர் போனவர் என்பது உலகறிந்த விஷயம். அது மட்டுமின்றி சரித்திரப் படங்களை மீண்டும் உயிர்பித்து இன்று இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களை சரித்திர படங்கள் நோக்கி திருப்பிய  பெருமை இவரையே சாரும். மஹதீரா’ முதன் முதலாக’ ராம்சரண் நடிப்பில் சரித்திர பின்னணியில் முயன்ற படம் மிகப் பெரிய வெற்றியும் வரவேற்பையும் பெற்றது. அதன் பிறகு இன்று வரை ராஜமெளலியின் படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இவர் ராம்சரணையும், ஜுனியர் என்.டி.ஆரையும் வைத்து இயக்கும் “ ஆர்.ஆர்.ஆர்”பல தரப்பு ரசிகர்களையும் ஈர்த்துள்ளது.

அது மட்டுமின்றி ஆறு மாதங்களுக்கு முன் இப்படத்தின் ”ஆர்.ஆர்.ஆர்” படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டர், மற்றும் ராம் சரணின் அறிமுக காணொளி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது அக்டோபர் 22 அன்று ஜுனியர் என்.டி.ஆரின் அறிமுக காணொளி வெளியாகும் என்று அந்தப் படக் குழு தற்போது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ராம்சரணின் ராமராஜூ கதாப்பாத்திரம் வெளியாகிவிட்டது. தற்போது ஜுனியர் என்.டி.ஆரின் பீம் கதாப்பாத்திரத்தின் தோற்றம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

%d bloggers like this: