October 29, 2020

நடிகை ஜெனிலியாவின் உடலுறுப்பு தான உறுதிமொழி

பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. தமிழ், தெலுங்கு,இந்தி,கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்த இவர் சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புத்திரன், சச்சின் போன்ற படங்களின் மூலம் தமிழ்த் திரை உலகில் தனக்கென ரசிகர்களை உருவாக்கினார். இவரது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கும் ஒரு திரைப்பட நடிகர்.

இன்று மருத்துவர்கள் தினத்தைப் பற்றிப் பல திரைக் கலைஞர்களும் தங்களது வாழ்த்துக்களையும் நன்றியையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வரும் வேளையில், ஜெனிலியாவும் அவரது கணவரும் உடல் உறுப்பு தானம் செய்யப்போவதாகக் கூறியுள்ளனர்.

“இதனைப் பற்றி நீண்ட நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தோம் ஆனால் செய்யமுடியவில்லை. மருத்துவர்கள் தினமான இன்று எங்கள் உறுப்புகளை தானம் அளிப்போம் என்று உறுதி ஏற்கிறோம். மேலும் இதைச் செய்வதற்கு எங்களை ஊக்குவித்த மருத்துவர் நாசர் ஷெரீர் அவர்களுக்கும், ’தி பிடரேஷன் ஆஃப் ஆப்ஸ்டடிரிக் அண்ட் கைனகாலஜிகல் சொசைட்டி ஆஃப் இண்டியா’ நிறுவனத்திற்கும் நன்றி. நீங்கள் ஒருவருக்குக் கொடுக்கக் கூடிய மிகப்பெரிய பரிசு உயிர் எனவே அனைவரும் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதி ஏற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் ” என்று தனது டிவிட்டர் பக்கத்திலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

%d bloggers like this: