November 25, 2020

சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் “கைதி”!!! மகிழ்ச்சியில் படக்குழு!!!

கார்த்தி நடித்து 2019ல் வெளியான தமிழ்த் திரைப்படம் ‘கைதி’. இது அதிரடி த்ரில்லர் படம். கதை, திரைக்கதை, இயக்கம்  லோகேஷ் கனகராஜ். படத்தில் கார்த்தி உடன் நரேன், அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியான், தீனா போன்றோர் நடித்து உள்ளனர். எஸ். ஆர். பிரகாஷ் பாபு, ஸ். ஆர். பிரபு இணைந்து தயாரித்து உள்ளனர், இணை தயாரிப்பு  திருப்பூர் விவேக். ஒளிப்பதிவாளர் சத்தியன் சூரியன் மற்றும் இசையமைப்பாளர் சி. எஸ். சாம். இது மிகப் பெரிய வெற்றி படைத்து, 105 கோடி வசூல் பெற்றது.

                                                                     

சிறையிலிருந்து விடுதலையாகும் ஒரு கைதி, தன் மகளைப் பார்க்க முதல் முறையாகப் போகும் போது, காவல் துறை அதிகாரிகளுக்கு உதவும் நிலை ஏற்படுகிறது. அதன் பின், அவர் தன் மகளைச் சந்தித்தாரா, காவல் துறை அதிகாரிகளின் உயிர் காப்பாற்றப்பட்டதா என்பது தான் படத்தின் கதை. இந்த கதை முழுவதும் ஒரே இரவில் நிகழ்வதாகக் காண்பிக்கப்பட்டது.

இந்த படம் தற்போது சர்வதேச இந்தியத் திரைப்பட விழா  ’டொராண்டோவில்’ திரையிடப்படவுள்ளது. இந்த மாதம் 9ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதி வரை திரையிடப்பட இருக்கும் பல மொழி படங்களில் இதுவும் ஒன்று.

இந்த திரைப்பட திருவிழா  வட அமெரிக்காவில் உள்ள கனடாவில் நடைப்பெற உள்ளது. இந்த விழாவின் நோக்கம் உலகம் முழுவதும் உள்ள பல மொழி கலைஞர்களை ஊக்குவிக்கவும், உறவை மேம்படுத்தவும் ஒருங்கிணைக்கப் படுகிறது.

இந்த திரைப்படங்களை 4 லட்சம் பேர் ஒரே நேரத்தில் பார்க்கும் படி உள்ள அரங்கத்தில் திரையிடப்படும். ஆனால் தற்போது கொரோனாவின் காரணமாக எத்தனை நபர்கள் பங்கேற்பார்கள் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த செய்தியைப் பற்றி இன்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன் டிவிட்டர் பதிவில்,  இதைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனக் கூறி மற்றும் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

https://iifft.ca/about.html

%d bloggers like this: