November 25, 2020

கடந்த காலம் கிடைத்தால் நான் இதையெல்லாம் கேட்பேன்… செல்வராகவன் பதில்

தமிழ் திரைத்துறையில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன்.

இவர் தமிழில் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் எனப் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கி உள்ளார். இறுதியாக இவர் சூர்யாவின் என். ஜி.கே படத்தை இயக்கினார்.

தற்போது எஸ்.ஜே.சூர்யாவின் ’நெஞ்சம் மறப்பதில்லை’, சந்தானத்தின் ’மன்னவன் வந்தானடி’ ஆகிய படங்களை இயக்க உள்ளார்.

கொரோனா அச்சம் காரணமாகப் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆர்வம் காட்டாத செல்வராகவன், இந்த ஊரடங்கு காலத்தில் தன் டிவிட்டர் பக்கத்தில் பல பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார்.

இந்தவகையில் இன்று, ”கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்? என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “நான், நண்பர்களுடன் மாலை முழுதும் அரட்டை அடித்து, விளையாடி, தூரத்தில் அப்பா நிழல் பார்த்து, வீட்டிற்கு ஓடி, அம்மா வைத்ததை சாப்பிட்டு, எந்தக் கவலையும் இல்லாது தூங்கிப் போன பொழுதைக் கேட்பேன்!

அல்லது… காலை முதல் தெரு ஓரம் காத்திருந்து அவள் என்னைக் கடந்து போகையில் உரசும் விழிகளின் தாக்கம் கேட்பேன்!“ என்றுக் கூறியுள்ளார்.




%d bloggers like this: