October 21, 2020

ஹிப் ஹாப் ஆதியின் “ யாருமே வேணாம் “ பாடல் நாளை வெளியாகிறது

தமிழ் திரையுலகில் இளம் இசையமைப்பாளரான ‘ஹிப் ஆஃப் ஆதி’, மீசைய முறுக்கு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் 2012ஆம் ஆண்டு ’ஹிப் ஹாப் தமிழா’ ஆல்பம் மூலம் பிரபலமானவர். இது இந்தியாவிலேயே தமிழில் வெளியான முதல் ஹிப் ஹாப் பாடலாகும். இது எதிர்பார்த்ததை விடப் பெரிய அளவில் வெற்றியையும் ஆதிக்குப் பெற்றுத்தந்தது.

இதனைத் தொடர்ந்து இவர், சுந்தர் சி, மோகன் ராஜா, பாண்டிராஜ், கே.வி.ஆனந்த், அஜய் ஞானமுத்து போன்ற முன்னணி இயக்குநர்களுடனும், பல முன்னணி நடிகர்களுடனும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் படங்களில் நாயகனாகக் களம் இறங்கிய ஆதி, மறு புறம் தொடர்ந்து ஹிப் ஹாப் பாடல்களையும் வெளியிட்டு வருகிறார்.

இதற்கிடையே இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்ட ஆதி. இரண்டு மாதங்களுக்கு முன் “’நான் ஒரு ஏலியன்’ என்று தலைப்பிடபட்ட ஆறு பாடல்களைக் கொண்ட ஆல்பத்தில் ஒரு பாடலின் சிங்கிள் டிராக்கை மட்டும் வெளியிட்டார்.

தற்போது ”யாருமே வேணாம்” என்ற தலைப்பில் ஒரு இசைக் காணொளியை நாளை மாலை 7 மணியளவில் வெளியிடுவதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

%d bloggers like this: