November 30, 2020

நடிகர் விவேக் ஒரு சூப்பர் ஹீரோ!!! ஹிப்ஹாப் ஆதி புகழாரம்!!!

ஆல்பம் பாடல்களின் மூலம் பிரபலமாகித் திரையுலகில் நுழைந்தவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் ’ஆம்பள’ படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். பிறகு ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தைத் தானே இயக்கி நடித்தார். கல்லூரி காதல், இசை, வாழ்க்கை என தன் வாழ்க்கை வரலாறோடு ஒப்பிட்டு இந்த படத்தில் நடித்திருந்தார் ஆதி. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் விவேக் , ஆத்மிகா , விக்னேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியாகி நேற்று மூன்று ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில் பல ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் ‘ 3 இயர்ஸ் ஆஃப் மீசைய முறுக்கு‘ என்ற ஹேஸ்டேக்கில் தங்களின் நினைவுகளைப் பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் மனோஜ் என்ற ஒரு ரசிகர் ‘ எல்லாருக்கும் அவங்க அவங்க அப்பா தான் ஹீரோ. ஆனால் இன்னொரு பையனோட அப்பாவும் நமக்கு சில நேரங்களில் ஹீரோ வா தெரிய வாய்ப்பு இருக்கு. விவேக் சாரோட ஒவ்வொரு காட்சியும் அப்படி தான் கட்டமைக்கபட்டிருக்கும்‘ என்று மீசைய முறுக்கு படத்தில் விவேக்கின் கதாபாத்திரத்தைப் புகழ்ந்திருந்தார்.

அதற்கு ஆதி, ‘அவர் சூப்பர் ஹீரோ‘ என்று குறிப்பிட்டுள்ளார். மீசைய முறுக்கு திரைப்படத்தில் விவேக்கின் அப்பா கதாபாத்திரம் பெரும்பாலானவர்கள் ரசித்த ஒரு கதாபாத்திரத்திரமாகும்.

%d bloggers like this: