November 30, 2020

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த “வாடி புள்ள வாடி”!!!

ஆல்பம் பாடல்களின் மூலம் பிரபலமாகிப் பிறகு திரைத்துறையில் பாடகராக அறிமுகமாகி இசையமைப்பாளர், நடிகர் என வளர்ந்தவர் ஹிப் ஹாப் ஆதி.

2017இல் வெளிவந்த “மீசைய முறுக்கு படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். மேலும் இந்தப் படத்தை ஆதியே இயக்கி இசையமைத்திருந்தார். ஆதி உடன் ஆத்மிகா, விவேக், விக்னேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கல்லூரி வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் ஆதியின் பிரபல ஆல்பம் பாடலான ”வாடி புள்ள வாடி” பாடல் இடம்பெற்றிருந்தது. இந்தப் பாடல் மீசைய முறுக்கு திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பே ஆதியின் ஆல்பம் பாடலாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. பிறகு இந்தப் படத்திலும் இந்தப் பாடல் சேர்க்கப்பட்டிருந்தது. இந்தப் பாடல் வெளியான நாள் முதலே தொடர்ந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வந்த நிலையில் தற்போது இந்தப் பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

%d bloggers like this: