October 31, 2020

ஜி.வி.பிரகாஷின் இசையில் புலர்ந்தது “புத்தம் புது காலை”

கௌதம் வாசுதேவ மேனன், ராஜீவ்மேனன், சுதா கொங்கரா, சுகாசினி மணிரத்னம், கார்த்திக் சுப்புராஜ், போன்ற மாபெரும் புகழ் பெற்ற இயக்குநர்களின் ஐந்து குறும்படங்களின் தொகுப்புதான் “புத்தம் புது காலை”. சமீபத்தில் இந்த குறும்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. இது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் முகப்புப் பாடலை இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அவர்கள் இசையமைத்திருக்கிறார். கபீர் வாசுகியின் வரிகளில் வெளிவந்துள்ள இந்தப் பாடலை நடிகர் சூர்யா அவர்கள் இன்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

பாரங்கள், ஏக்கங்கள், ஆசைகள் என எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு விடியலும் நமக்காக விடிகிறது என்று எண்ணி நம்பிக்கையோடு பறக்கலாம் என்று ரசிகர்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும் இந்த பாடலின் வரிகள் இதோ….

“வீசும் காற்று வீச என்றும் தயங்காதே..
கனவுகள் கொண்டால்.. தடை மதிக்காதே..
சுற்றும் பூமி என்றும் உன்னை மறக்காதே..
உனக்கென்று தானே.. விடியுது நாளே..

புத்தம் புது காலை… இதயத்தில் எட்டிப் பார்க்குதே… எழுந்துவிடு எனதுயிரே…
இன்று எந்தன் நாளை… பிடித்திடு உந்தன் கையிலே… விரித்துவிடு… புது சிறகை…

வாழ்க்கை சிறுக சிறுக சிறுக சிறுக சிறுக சிறுக.. பாரங்கல் சேர்க்குதே…
வானம் விடிய விடிய விடிய விடிய விடிய விடிய… ஏக்கங்கள் தாக்குதே…
நாட்கள் பறக்க பறக்க பறக்க பறக்க பறக்க பறக்க… ஆசைகள் தாக்குதே…
நீயும் கதைக்க கதைக்க கதைக்க கதைக்க கதைக்க கதைக்க… நம்பிக்கை பூக்குதே..

நாளை உன் அருகில் நான் இருந்தால்… போக பாதை புதிதாய் உண்டாகுதே…”

%d bloggers like this: