October 31, 2020

மொட்ட மாடி குறும்பட இயக்குநரின் முதல் திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார்!!!

அறிமுக இயக்குநர் அகிலனின் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் புதிய திரைப்படத்தினை பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரியின் மகனாகிய ஜி.வி.பிரகாஷ் குமார் திரைப்பட நடிகர் பாடகர் இசை அமைப்பாளர் தயாரிப்பாளர் என பல பரிமாணங்களை கொண்டுள்ளார். இவர் தற்போது ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4 ஜி, காதலை தேடி நித்யானந்தா, காதலிக்க யாருமில்லை, பேச்சலர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். ட்ராப் சிட்டி என்னும் ஹாலிவுட் திரைப் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் புதிய திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கு கையெழுத்திட்டுள்ளார். இந்த திரைப்படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது. இஷானி சஜ்மி சலீம் இந்த திரைப்படத்தை நவீரா சினிமாஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிரார். ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் அவர்களே இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் அகிலன் இயக்குகிரார். இவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் “எனக்கு வாய்ப்பு அளித்த இறைவனுக்கு நன்றி.. இன்று காலை எனது திரைப்படத்தின் பூஜை இனிதாக நடைபெற்றது. நவீரா சினிமாஸ் தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் நான் இயக்குநராக அறிமுகமாகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இவர் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற மொட்ட மாடி என்னும் குறும்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: