October 21, 2020

அடுத்தப் பேய்படம் தயாராகிறதா?? சிரிக்க காத்திருங்கள்!!!

நடிகர் சாருஹாசனை வைத்து 2019ஆம் ஆண்டில் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி அவர்கள் தாதா87 என்னும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இயக்குநர் விஜய் ஸ்ரீஜி தற்போது புதிய திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களையும், அவர்களின் கதாப்பாத்திரங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

இவர் இயக்கப் போகும் இந்த புதிய திரைப்படத்தில் மனோபாலா, நகைச்சுவை நடிகர் வையாபுரி, கொஞ்சம் நடிங்க பாஸ் புகழ் ஆதவன் நடிகை வித்யா ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. தற்போது இந்த கூட்டணியில் சில்மிஷம் சிவா அவர்கள் இணைய போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதன் விளம்பர காட்சிகளை பார்க்கும்போது இது பேய் படம் என்று தோன்றுகிறது. மேலும் மனோபாலா, ஆதவன், சில்மிஷம் சிவா, வையாபுரி ஆகியோரது கூட்டணியை பார்க்கும்போது இது ஒரு முழு நீள நகைச்சுவை திகில் திரைப்படம் என்று தோன்றுகிறது.

இந்த திரைப்படத்திற்கு பெயர் மற்றும் இதர விபரங்களை வெளியிடாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் தலைப்பு மற்றும் இதர விவரங்களை வரும் அக்டோபர் 1-ம் தேதியன்று வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்து இருக்கிறார்கள்.

%d bloggers like this: