November 1, 2020

நிசப்தம் திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது.

அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருக்கும் ”நிசப்தம்” திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது.

மாதவன் நடிப்பில் வெளிவர இருக்கும் புதிய திரைப்படம் நிசப்தம். இந்த திரைப்படம் திகில் காட்சிகள் நிறைந்த சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்பட வகையைச் சேர்ந்தது. கோனா வெங்கட் அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை ஹேமந்த் மதுகர் அவர்கள் எழுதி இயக்கியிருக்கிறார். கோபி சுந்தர் அவர்கள் இசையமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக அனுஷ்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களோடு மைக்கேல் மேடிசன், அஞ்சலி, ஷாலினி பாண்டே, ஒலிவியா டங்கிலே, சுபா ராஜு ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. மிரட்டலான இந்த ட்ரெய்லர் வெளியானதற்குப் பிறகு ரசிகர்களிடம் இந்த படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி அன்று ஒடிடி தளத்தில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கும் இந்த சூழலில் இந்த திரைப்படத்தின் “புது உணர்வே” எனத் தொடங்கும் முதல் பாடல் நாளை வெளியாக உள்ளது. இதனை மங்கோ மியூசிக் தமிழ் வெளியிடுகிறது.

%d bloggers like this: