கன்னடத் திரைத் துறையில் படப்பிடிப்பு துவங்கியது!

கொரோனா தோற்றுப் பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலிலிருந்தது. தற்போது ஊரடங்கு விதிமுறைகள் சற்று குறைக்கப்பட்டு அரசாங்கத்தின் விதிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது கன்னட திரைத் துறையினர் அரசாங்கத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி நடிகர் கிச்சா சுதீப்பின் ‘பேன்டோம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பைத் துவங்கியுள்ளனர்.
கன்னடத் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் பாடகர் எனப் பல அவதாரங்களைக் கொண்ட சுதீப் சஞ்சீவ் தனது நடிப்புத் திறமைக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் பிரபலமாக சுதீப் அல்லது கிச்சா சுதீப் என்று அழைக்கப்படுகிறார். இவர் முதன்மையாகக் கன்னட மொழி படங்களில் பணியாற்றினாலும் தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார்.
இன்று அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் தன் புதிய திரைப்படமான ‘பேன்டோம்’ திரைப்படத்தைப் பற்றிப் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் ‘பேன்டோம் திரைப்படத்தின் ரோலிங் தொடங்கியது. ஒவ்வொரு நிமிடமும் முன்னெச்சரிக்கைகளைத் தயாரிப்பில் கவனித்து வருகின்றன. அதன் உற்சாகம் மற்றும் ஆர்வத்தை செட்டில் காணலாம். கிடைக்கக்கூடிய ஒவ்வொரு நபரும் பாதுகாப்பாக இருக்கத் தேவையான ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுத்து வருகின்றனர். எல்லாம் சுமுகமாகப் பயணிக்க வேண்டும் என்று நம்புகிறேன். மேலும் குறைந்த அளவு கூட்டத்தை ஏற்றுக்கொள்ள எங்களுக்கு அனுமதிக்கப் பட்டிருந்தாலும், மகிழ்ச்சியாக அரசாங்கத்தின் விதிமுறைகளை செட்டில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் தொழில்நுட்ப யூனிட், உற்பத்தி, கலை போன்ற அனைத்து கன்னட திரைத்துறை உறுப்பினர்களும் பின்பற்றி வருகின்றனர். கன்னட திரைத்துறையின் குடும்பத்திலிருந்து எங்களால் முடிந்தவரை உறுப்பினர்களுக்கு வேலை வழங்குவதே இதன் நோக்கம்’ என்று தெரிவித்துள்ளார்.
Also happy tat though its a minimized crowd we were allowed to have acc to the govt rules tats been laid,, Every member on set, may it be Technical,Unit,Production,Art etc are from KFI. Intention was to provide work to as many members as we could from the family of KFI. https://t.co/FdabPAXCX2
— Kichcha Sudeepa (@KicchaSudeep) July 16, 2020