”விஷால் ஆர்யா ” இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படத்தில் முன்னனி நடிகர்களான ஆர்யாவும், விஷாலும் இணைந்து நடிக்க உள்ளனர். இந்தப் படத்தை வினோத் குமார் தயாரிக்கிறார்.
ஆர்யா தற்போது டெடி திரைப்படத்திலும், 3 தேவ் என்ற இந்திப் படத்திலும் நடித்து வருகிறார். இதே போல விஷால் துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும், சக்ரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ஆர்யாவும், விஷாலும் இணையப் போகும் இந்த படத்திற்கு பெயர் மற்றும் பிற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. மேலும் இந்தப் படம் ஆர்யாவுக்கு 32வது படமாகும். அதே போல விஷாலுக்கு இது 30வது படமாகும். இவர்களுடன் டப்ஸ்மேஷ் புகழ் மிருனாளினியும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், நடிகர் விஷால் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்பட்த்துடன் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் இந்தப் படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் என்றும், படத்திற்கு தமன் இசையமைக்கிறார் என்ற செய்தியையும் வெளியிட்டுள்ளார்.