October 28, 2020

பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் மரணம்!!

பீம்சிங் கண்ணன் அவர்கள் இயக்குனர் பாரதிராஜாவின்  நிரந்தரமான கேமராமேன்.பெரும்பாலும் பாரதிராஜாவுடன் மீண்டும் மீண்டும் இணைந்ததால் பாரதிராஜாவின் கண்கள் என அழைக்கப்படுகிறார்.

பாரதிராஜாவின்  அலைகள் ஓய்வதில்லை ,கருத்தம்மா,முதல் மரியாதை,ஒரு கைதியின் டைரி, கிழக்கு சீமையிலே போன்ற பல சிறந்த  திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.2001 ஆம் ஆண்டு கடல் பூக்கள் திரைப்படத்தில் பணியாற்றியதின் மூலம் இவருக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சாந்தாரம் விருது அளிக்கப்பட்டது. தமிழ்,தெலுங்கு,மலையாளம் போன்ற பல மொழி திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 கேமராமேன்  கண்ணன் ஏற்கனவே உடல்நலக் குறைவின் காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், வென்டிலேட்டர் மூலமாக இவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் சில மணிநேரத்திற்கு முன்பு அவர் மரணம் அடைந்தார் என்பது தெரியவந்துள்ளது.இந்த செய்தி  திரையுலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை குஷ்பு,நடிகர் சாந்தனு,பிரபல இந்தி நடிகர் அமித் சாகர் மற்றும் பல பிரபலங்கள் சமூக வலைதளங்களின் வாயிலாக இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

%d bloggers like this: