October 21, 2020

பிரபல நடிகை உஷா ராணி காலமானார்

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் சுமார் 250 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை உஷா ராணி. தமிழில் 1970 ஆம் ஆண்டு திருமலை தென்குமரி என்னும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் ஆகியோருடன் நடித்துப் பிரபலமானவர். இவர் மலையாளத்தில் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் நான்கு திரைப்படமும் மற்றும் இந்தியில் ஒரு திரைப்படமும் நடித்துள்ளார். காமெடி ஸ்டார் , ராணி மகாராணி, ஆன் ரெக்காரடு போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

62 வயதான இவர் சிறுநீரகப் பிரச்சனை காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு இருந்தார். பல வருடங்களாக அவருக்கு இந்த பிரச்சினை இருந்ததாகக் கூறப்பட்டது . இந்நிலையில் கடந்த ஜீன் 15 அன்று சிறுநீரகப் பிரச்சனை அதிகமானதாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவிற்குத் திரையுலகினர் தங்களின் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

%d bloggers like this: