பூஜையுடன் தொடங்கிய சந்தானத்தின் ”பாரிஸ் ஜெயராஜ்” டப்பிங் பணிகள்!!!

ஏ1 இயக்குநருடன் நடிகர் சந்தானம் மீண்டும் கைகோர்க்க இருக்கிறார். கே.ஜான்சன் இயக்கத்தில், எஸ்.ராஜ நாராயணன் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஏ1. முழுநீள நகைச்சுவை திரைப்படமான இந்தப் படம் வெளியானது. நடிகர் சந்தானம் அவர்கள் மீண்டும் இதே கூட்டணியில் நடிக்க இருக்கிறார். கே.குமார் இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறார். ஆர்த்தூர் ஏ வில்சன் ஒளிப்பதிவில், பிரகாஷ் மாப்பு எடிட்டிங்கில், சந்தோஷ் நாராயணன் இசையில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்திற்கு ”பாரிஸ் ஜெயராஜ்” என்று பெயரிட்டுள்ளனர். லார்க் ஸ்டூடியோ பேனரின் கீழ் உருவாக இருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. சந்தானம் இந்தப் படத்தின் தலைப்புக் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஏ1 திரைப்படம் ஏற்கனவே வெற்றிப் பெற்ற நிலையில் தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இதற்கிடையே இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் இன்று பூஜையுடன் துவங்கி இருக்கிறது.