November 30, 2020

கதாநாயகனாக அவதாரம் எடுத்த சூர்யாவின் வில்லன்!!! வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன்!!!

மயக்கம் என்ன, கோ, 3, தானா சேர்ந்த கூட்டம், காப்பான் உள்ளிட்டப் படங்களுக்கு ஆர்ட் டைரக்டராக பணியாற்றிய டி.ஆர்.கே.கிரண் கதாநாயகனாக களம் இறங்கியிருக்கிறார். இவர் வேலையில்லா பட்டதாரி, கோ, குட்டி புலி, வேதாளம், கதக்களி, காப்பான் என எண்ணற்றத் திரைப்படங்களில் எதிர்மறைக் கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.

பூத கண்ணாடி பிக்சர்ஸ் வழங்கும், கே.தருணின் தயாரிப்பில், ஜே.எம்.ராஜா எழுத்து இயக்கத்தில், ரோஹித் ஜி-சோகன்பாபுவின் இசையில், தியாகுவின் எடிட்டிங்கில், தினேஷ் தங்கராஜ் ஒளிப்பதிவில் டி.ஆர்.கே.கிரண் கதாநாயகனாக களம் இறங்கும் திரைப்படம் அல்வா. இதுவரை எதிர்மறைக் கதாப்பாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த கிரண் இந்தப் படத்தில் கதாநாயகனாக களம் இறங்குகிறார்.

அல்வா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது வலைதளப் பக்கத்தில் இந்த டைட்டில் அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். முழு நீள நகைச்சுவைத் திரைப்படமான இந்தப் படத்தின் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

%d bloggers like this: