January 27, 2021

“பொய்யான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம்” சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் வேண்டுகோள்

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவர இருக்கும் புதிய திரைப்படம் “சூரரைப்போற்று”. இந்த திரைப்படத்தை பற்றி பலவிதமான தகவல்கள் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்த திரைப்படத்தை தயாரிக்கும் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் “தவறான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் எங்களின் அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை காத்திருக்கவும்” என கேட்டுக் கொண்டுள்ளனர்.

நடிகர் சூர்யாவின் நடிப்பில் புதிதாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இந்த திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா அவர்கள் இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யா மற்றும் குநீத் மொங்கா ஆகியோர் தங்களது 2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் சீக்கியா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் மூலம் தயாரித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனராகிய திரு ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்வில் நடந்த சில உண்மைச் சம்பவங்களைக் அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் சூரியா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஊர்வசி, கருணாஸ், விவேக் பிரசன்னா, கிருஷ்ண குமார், காளி வெங்கட் அர்ஜுனன், சூப்பர் குட் சுப்பிரமணியன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் வெளியீடு சம்பந்தமாக பல விதமான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை முன்னிட்டு இந்த திரைப்படத்தை தயாரித்துள்ள 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இன்று தனது வலைத்தள பக்கத்தில், “தவறான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம். எங்களது அதிகாரப்பூர்வமான தகவலுக்காக தயவு செய்து காத்திருக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளனர்.

%d bloggers like this: