November 25, 2020

மகிழ்ச்சியாக இருக்க இயக்குநர் செல்வராகவன் சொல்லும் தத்துவம்!!

எப்பொழுதும் பிரச்சினை வரும் பொழுது தான் அதை எதிர்ப்பதற்கான ஆற்றல் நம்மிடம் அதிகரிக்கும் என்பதை நாம் இந்த ஊரடங்கு காலங்களில் புரிந்து கொள்ளலாம். உலகமே இந்த ஊரடங்கு காலங்களில் இதை நன்கு உணர்ந்திருக்கிறது என்று சொல்லலாம். அது மட்டுமின்றி நாம் பார்த்து அதிசயித்த நட்சத்திரங்களின் அன்றாட வாழ்க்கையையும், அவர்களுடன் கலந்துரையாடும் தருணங்களையும் இந்த ஊரடங்கு காலம் மக்களுக்குக் கொடுத்திருக்கிறது.

அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்கிறார் பிரபல இயக்குநர் செல்வராகவன். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தத்துவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், நம் வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பது அல்லது சோகமாக இருப்பது என இரண்டில் ஒன்றை முதலில் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்.நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதைத் தேர்ந்தெடுங்கள். அது சில நாட்களுக்குப் பொய்யானதாக இருக்கும். ஆனால் அதுவே பிறகு பழகி, தினசரி நடைமுறையாக மாறிவிடும். நீங்கள் மகிழ்ச்சியானவராக மாறிவிடுவீர்கள். இது என்னுடைய அனுபவம் என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

%d bloggers like this: