மீண்டும் “7ஜி ரெயின்போ காலனி” செல்வராகவன் விருப்பம்

காதலை மிகவும் இயல்பாகவும், நெருக்கமாகவும் சொல்வதில் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த இயக்குனர்களில் செல்வராகவன் மிகவும் குறிப்பிடதக்கவர். தனுஷ் என்ற மாபெரும் நடிகனை முதன் முதலில் காதல் தளத்தில் “ காதல் கொண்டேன்” மூலம் கால் பதிக்க வைத்தவர். அதன் பிறகு 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை,ஆயிரத்தில் ஒருவன், மயக்கமென்ன, என்று படத்திற்கு படம் புதிய பரிமாணத்தில் பயணித்தாலும், இவருடைய காதல் படங்களில் 7ஜி ரெயின்போ காலனி இன்றும் கிளாசிக் வகை. அதை தற்பொழுது இந்தப் படம் வெளி வந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிப்பிட்டு இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
வேலையில்லாமல் நண்பர்களுடன் சுற்றித்திரியும் இளைஞனான ரவி கிருஷ்ணா அவன் தங்கியிருக்கும் குடியிருப்புக்கு குடிவரும் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண்ணொருவரைக் ( சோனியா அகர்வால் ) காதலிக்கிறார்.அவர்கள் காதலின் போக்கை இருவரையும் வைத்து மிக இயல்பாகவும், துள்ளலாகவும் பதிவு செய்திருப்பார். யுவன் சங்கர் ராஜா,நா.முத்துக்குமார், ஸ்ரேயா கோஷல் என்று படம் மிகப் பெரிய கூட்டணியுடன் அன்றைய இளைஞர்களின் டிரெண்டாக 7ஜி ரெயின்போ காலனி மாறியிருந்தது.
தற்போது படம் வெளியாகி 16 வருடங்கள் கடந்த நிலையில் ” இது போல் ஒரு காதல் கதையை இன்றைய சூழலில் சொல்ல மிகப் பெரும் ஆசை !” என்று இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.