October 31, 2020

”800 படத்தில் நடிக்க வேண்டாம்” விஜய் சேதுபதிக்கு பிரபல இயக்குனர் கடிதம்

மக்கள் செல்வன் என்று தமிழக மக்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதியின்  நடிப்பில் தயாராகி வரும் ”800 தி மூவி” திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று பிரபல இயக்குனர் விஜய் சேதுபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

விஜய் சேதுபதி தற்போது இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான “800 தி மூவி” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மூவி டிரெய்ன் மோஷன் பிக்சர்ஸ் அண்ட் டார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை எம்எஸ்.ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். சி.எஸ்.அமுதன் இசையில், ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில், சிவ நந்தீஸ்வரணின் எடிட்டிங்கில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதனாக நடிக்கிறார்.

இதற்கிடையே 800 திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது, அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி அவரை வைத்து படம் இயக்கிய இயக்குனர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ரசிகர்கள் சமூக வலைத்தளப் பக்கம் மூலம் தங்களின் அதிருப்தி மற்றும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். பிரபல இயக்குனர்களும் நடிகர் விஜய் சேதுபதிக்கு அந்த படத்தில் நடிக்க வேண்டாமென சமூக வலைத்தளப் பக்கம் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பிரபல இயக்குனர் பாரதிராஜாவும் ஒரு கடிதம் மூலம் தனது வேண்டுக் கோளை வைத்துள்ளார். அதை தற்போது தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

%d bloggers like this: