November 25, 2020

யானையின் கொடூர மரணம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள இயக்குனர் அட்லி!!

வன அதிகாரி ஒருவர் யானையின் கொடூரமான மரணம் குறித்து சமூக ஊடகங்களில் விவரித்ததை அடுத்து இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கர்ப்பமாக இருந்த காட்டு யானை ஒன்று பாலக்காடு மாவட்டத்தில் சைலண்ட் பள்ளத்தாக்கின் காடுகளை விட்டு வெளியேறி, அருகிலுள்ள கிராமத்தில் உணவு தேடிச் சென்றுள்ளது. வன அதிகாரிகளின் கூற்றுப்படி, யானை வெடிகுண்டு நிரப்பிய அன்னாசிப்பழத்தை சாப்பிட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சில உள்ளூர் வாசிகளால் வெடிகளால் நிரப்பப்பட்ட அந்த அன்னாசிப்பழத்தை சாப்பிட்ட யானையின் வாயிலேயே வெடி வெடித்துள்ளது.

வாய் மற்றும் தாடை பகுதிகள் கடுமையாகச் சேதம் அடைந்த நிலையில் அந்த காட்டு யானை வலியை தாங்க முடியாமலும், வாய் கிழிந்த நிலையிலும் உணவை உட்கொள்ள முடியாமலும் வலியாலும் படியாலும் துடித்த அந்த யானை வெள்ளியாறு நதிக்குச் சென்றுள்ளது. கர்ப்பமாக இருந்த யானை கடந்த புதன்கிழமை கேரளாவில் தண்ணீரில் நின்றபடியே இறந்தது.

இந்த சம்பவம் மக்களிடம் பெரும் சோகத்திற்கு வழிவகுத்துள்ளது.

பிரபலங்கள் பலரும் இதற்கு வருத்தம் தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் அட்லி, ”இந்த சம்பவத்திலிருந்து வெளிவர முடியவில்லை. அவள் கர்ப்பமாக இருந்திருக்கிறாள்” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதே போல சிம்ரன், பூஜா பட், ரகுல் ப்ரீத் சிங், சின்மயி, மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்டோரும் கண்டனங்களையும் வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

%d bloggers like this: