November 1, 2020

இயக்குநர் சுதா ட்விட்டரில் இல்லை – முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணு விஷால்!!

கொரோனா ஊரடங்கினால் தளபதி விஜய் நடித்து உருவான மாஸ்டர் படம் எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

      இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது  சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா என்று ஒரு தகவல் பரவி வருகிறது அது மட்டுமின்றி வரும் ஜூன் மாதம் 22ம் தேதி அதாவது விஜய்யின் பிறந்தநாள் அன்று தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவதாகச் சுதா ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரின் முதல் படக் கதாநாயகனான, நடிகர் விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில், இயக்குநர் சுதா எந்த சமூக வலைத்தளத்திலும் இல்லை. அவரது பெயரில் போலிக் கணக்குகள் இருக்கிறது. அதை நம்பாதீர்கள் என்று சுதா கூறியதாக நடிகர் விஷ்ணு விஷால் பதிவிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க:தன் தந்தையுடன் சிறு வயது புகைப்படம் – ட்விட்டரில் விஷ்ணு விஷால்!!

1 thought on “இயக்குநர் சுதா ட்விட்டரில் இல்லை – முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணு விஷால்!!

Comments are closed.

%d bloggers like this: