November 25, 2020

”காதல் செய்ய மொட்டை மாடி போல் வருமா?”!!! 7ஜி நினைவுகளில் செல்வராகவன்!!!

தமிழ் திரைப்படத்துறையில் தனது இயக்கத்தின் மூலம் பலதரப்பு மக்களையும் கவர்ந்தவர் தான் இயக்குநர் செல்வராகவன்.

இயக்குநரும் தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜா அவர்களின் மகனாவார். நடிகர் தனுஷ் அவர்களின் அண்ணனாவார்.

2002ஆம் ஆண்டு வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தில் கதையாசிரியராக தன் கலைப்பணியை தொடங்கி இன்று தன் இயக்கத்தின் மூலம் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தையும், ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டவர்.

இவருடைய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மாறுபட்ட கதையமைப்பை கொண்டதாகும். அதனாலேயே மக்கள் மனங்களையும் கவர்ந்தார்.

செல்வராகவன் அவர்களது இயக்கத்திலும், யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசையிலும் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த “7ஜி ரெயின்போ காலணி” திரைப்படம் காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

திரைப்பட தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம் அவர்களின் மகனும் நடிகருமான ரவி கிருஷ்ணா இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக நடித்தார். இந்த திரைப்படத்தில் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக சோனியா அகர்வால் நடித்தார்.

இவர்கள் இருவரது காதல் காட்சிகளும் இன்றும் மக்கள் மனதை விட்டு நீங்கவில்லை. அவ்வளவு அழகான திரைக்கதையை கொண்டு காட்சியமைத்து இயக்கியிருப்பார் செல்வராகவன் அவர்கள்.

இதற்கிடையே, இயக்குநர் செல்வராகவன் அவர்கள்  தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதில், ”காதல் செய்ய எத்தனையோ இடம் இருந்தாலும் மொட்டை மாடி போல் வருமா?” என்ற கேள்வியை கேட்டு ‘7ஜி ரெயின்போ காலணி’ என்ற ஹேஷ்டேகின் மூலம் தனது திரைப்பட காட்சிகளை நினைவு கூர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அந்த திரைப்படத்தை மறக்க முடியாது சார் என்று தெரிவித்துள்ளனர்.

%d bloggers like this: