December 3, 2020

உலகநாயகனின் அன்பு மழையில் இயக்குநர் லோகேஷ் மற்றும் அரவிந்த்!!!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1987ஆம் ஆண்டு வெளியாகி, வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் தான் “சத்யா”. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ‘போட்டா படியுது’ என்ற எழுச்சி மிகுந்தப் பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலின் காட்சியமைப்பு இன்றும் ரசிகர்கள் மனதில் இடம்பெற்றுள்ளது.

இதற்கிடையே 61 ஆண்டுகளாக தன் கலைப்பயணத்தை தொடர்ந்து வரும் உலகநாயகனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் குரு ஸ்மரன் நடிப்பில் சசிகுமார் தயாரிப்பில் “சத்யா” திரைப்படத்தின் ‘போட்டா படியுது’ பாடலை அதே காட்சியமைப்போடு ரீகிரியேஷன் செய்துள்ளனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இன்று வெளியிடுவார் என்று கூறியிருந்தனர்.

அதேபோன்று இன்று மாலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் அப்பாடலின் காணொளியை வெளியிட்டு கமல்ஹாசன் அவர்களை கௌரவப்படுத்தி வாழ்த்தும் இந்த கிளர்ச்சி கீதத்தை வெளியிடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையுமாகும் என்று கூறினார். மேலும் இந்தப் பாடலை உருவாக்கிய சிம்பா படத்தின் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர் அவர்களையும் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் பாடலை ரீ டிவீட் செய்துள்ளார். அதில் இது வெறும் மலரும் நினைவுகள் அல்ல, மாறா அன்பு.

இதற்கு பதில்பரிசு என் மாறா அன்பு மட்டுமாகவே இருக்க முடியும். என் நீண்ட பயணத்தில் என்னை அயர்வின்றி நடத்தும் சக்தியும் அதுதான் என்று கூறியுள்ளார். மேலும் சிம்பா இயக்குநர் அரவிந்தையும், லோகேஷ் கனகராஜையும் டேக் செய்துள்ளார்.

%d bloggers like this: