December 3, 2020

அட்லீ இயக்கும் ஷாருக்கானின் புதிய திரைப்படம் “சங்கி”!!!

சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்திற்கு பிறகு ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர் அட்லீ அவர்கள் இயக்குகிறார். இந்த படத்திற்கு “சங்கி” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் இளம் இயக்குநர் அட்லீ அவர்கள், 2013ஆம் ஆண்டு வெளிவந்த “ராஜா ராணி” திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். இவர் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கி இருக்கிறார்.

இவர் இயக்குநராவதற்கு முன் இயக்குநர் ஷங்கர் இயக்கிய நண்பன் மற்றும் எந்திரன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். மேலும் இவர் தன்னுடைய முதல் படம் ராஜா ராணிக்காக இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளார்.

தற்போது இவர் தன்னுடைய அடுத்த படத்திற்காக நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோனே ஆகியோருடன் கைகோர்க்கிறார். இந்த படத்திற்கு சங்கி என்று பெயரிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது.

%d bloggers like this: