October 31, 2020

விரைவில் வெளியாகும் துருவ நட்சத்திரம் படத்தின் பாடல்!!!

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம். இத்திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, சிம்ரன், ராதிகா, பார்த்திபன், முன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

துருவநட்சத்திரம் திரைப்படம் இதுவரை திரைக்கு வரவில்லை. மூன்று வருடங்களுக்கு முன்பு திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரும் எதிர்பார்ப்பை அளித்தது. துருவ நட்சத்திரம்
2018ஆம் ஆண்டில் வெளியாக வேண்டிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திரைப்படம் இதுவரை திரைக்கு வராததால் ரசிகர்கள் சற்று சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் படக்குழுவிடமிருந்து திரைப்படத்தின் பாடல் வெளியீடு குறித்து அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பின் படி படத்தின் ஒரு மனம் எனும் காதல் பாடல் பாடலாசிரியர் தாமரையின் வரிகளில், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் விரைவில் வெளியாகவிருக்கிறது. இதனை ஒன்றாக என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களும் தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் தற்போது பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. அநேகமாகத் துருவநட்சத்திரம் திரைப்படம் ஓடிடி தளங்களில் வெளியிடப்படலாம் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

%d bloggers like this: