October 26, 2020

துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் காதல் பாடலின் காணொளி வெளியாகி இருக்கிறது

கௌதம் மேனன் இயக்கியிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் “ஒரு மனம் நிற்க சொல்லுதே..” என்னும் காதல் பாடலின் காணொளி வெளியாகி இருக்கிறது. கார்த்திக் மற்றும் சாஷா திருபாதி ஆகியோரின் குரலில் கவிஞர் தாமரையின் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு ஹரீஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

மனதை மயக்கும் காதல் மெல்லிசை பாடலாகிய இந்த பாடலின் வரிகள் இதோ:
” ஒரு மனம் நிற்கச் சொல்லுதே..
ஒரு மனம் நெட்டி தள்ளுதே…
எதை நான் கேட்பது..தடுமாற்றம் தாக்குது..
தினசரி உன்னை பார்க்கவே,
திருடிய நெஞ்சை மீட்கவே,
உன் வீட்டை தேடவா?
உறங்காமல் தேயவா?
தினம்… கணம்… நீ வந்த சொப்பனம்.. நினைவில் நர்த்தனம்
வரும்.. கணம்..என் அன்பே ஆயுதம் தினம் வரும் இது தான் முதல் கணம்..

இன்னும் என்ன இடைவெளி.. தூரம் அனுபவி
பக்கம் வந்தால் அனுமதி.. போதும் அரைநொடி
என்னை உன்னை பிரித்துவிடும்..காற்றில் கதகலி..
மேலே நின்று சிரித்திடும் மஞ்சள் நிலவொளி..
தீ மூட்டும் வானத்தை தேடப் போகிறேன்..
மழை வந்தும் கரைவதால் முத்தம் தேடினேன்..
ஒருபுறம் நானம் கில்லுதே.. மறுபுறம் ஆசை தள்ளுதே..
எதை நானும் கேட்பது! தடுமாற்றம் தாக்குது..
தினசரி என்னை பார்க்கவே.. திருடிய நெஞ்சை மீட்கவே..
என் வீட்டை தேடி வா.. உறங்காமல் தேயவா..

வானம் பெய்ய கடவது.. ஈரம் இனியது
முத்தம் கொண்டு துடைப்பது.. இன்னும் எளியது..
உள்ளே தூங்கும் மனமிது.. உறக்கம் கலையுது..
எத்தனை நாட்கள் பொறுப்பது..ஏங்கி தவிக்குது..
நான் இன்று நான் இல்லை.. நாணல் ஆகிறேன்..
நதி போலே நீ சென்றால்.. நானும் வருகிறேன்..
ஒருமனம் நிற்கச் சொல்லுதே….”

கௌதம் வாசுதேவ மேனன் இயக்கிவரும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ரீத்து வர்மா, ஐஷ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா, சிம்ரன், திவ்யதர்ஷினி, வம்சி கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர். கௌதம் வாசுதேவ மேனன், வெங்கட் சோமசுந்தரம், ரேஷ்மா, செந்தில் வீராசாமி, பி. மதன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஜான், யோகன், துருவ ஆகிய மூன்று பெயர்களில் விக்ரம் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். மூன்று தனித்தனி கதாபாத்திரங்களா அல்லது ஒரே ஆள் மூன்று பெயர்களோடு இருக்கிறாரா என்பது தெரியவில்லை.

%d bloggers like this: