November 26, 2020

தோனியின் பிறந்தநாள் டி.பி!!! மகிழ்ச்சியில் வரலட்சுமி சரத்குமார்!!!

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாளுக்கு முன் கூட்டியே அவரது பிறந்தநாள் டி.பியை வெளியிட்டுள்ளனர். நடிகை வரலட்சுமி சரத்குமாரும் அந்த பிறந்தநாள் டி.பியை வெளியிட்டு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவானான கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாள் வருகிற ஜூலை 7ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது ரசிகர்கள் சார்பாகப் பிரபலங்கள் பலரும் இணைந்து அவரது பிறந்தநாளுக்கான டி.பியை வெளியிட்டுள்ளனர். திரைத்துறை பிரபலங்கள் பலரோடு இணைந்து நடிகை வரலட்சுமி சரத்குமாரும் இந்த டி.பியை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில்  அவர் கூறியிருப்பதாவது, “எங்கள் பிரியமான தலதோனியின் டி.பியைத் வெளியிடுவதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நான் அவரது பெரிய ரசிகை என்பது அனைவருக்கும் தெரியும். இந்த ஆண்டு ஐ.பி.எல் 2020 இல் அவரது ஆட்டத்தைக் காண முடியவில்லை, ஆனால் அவர் மீண்டும் களமிறங்குவார் என்று நான் நம்புகிறேன். எங்களது வாழ்த்துக்கள். இந்த டி.பி உங்கள் ரசிகர்கள் அனைவரிடமிருந்தும் முன்கூட்டியே வடிவமைக்கப்பட்டது”, என்றார்.

இந்த டி.பியை நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஸ்டூடியோ வடிவமைத்துள்ளது. இவரைத் தொடர்ந்து திரைத்துறை பிரபலங்களான சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் எனப் பலரும் இந்த டி.பியை வெளியிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: