திரையரங்கில் மீண்டும் வெற்றிநடை போடும் தாராள பிரபு திரைப்படம்

ஹரிஷ் கல்யாண், தன்யா ஹோப், விவேக் ஆகியோர் நடித்துக் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் தாராள பிரபு. இந்த படம் இந்தியில் வெளியான விக்கி டோனர் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படம் “உயிரணு தானம்” பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலிருந்தது. இந்த படத்தில் உயிரணு தானம் செய்பவராக ஹரிஷ் கல்யாணும், மருத்துவராக விவேக்கும் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பலரும் நடிகர் விவேக்கின் நடிப்பைப் பாராட்டினர்.
இந்நிலையில் இத்திரைப்படம் வெளியான இரண்டே வாரங்களில் கொரோனா பரவல் காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டதால் இத்திரைப்படம் பெரிதளவில் பாதிக்கப்பட்டது என்றே கூற வேண்டும்.
இந்நிலையில் தற்போது மலேசியாவில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டு கொரோனாவிற்கு முன் வெளிவந்த மற்றும் பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் திரையிட்டு வருகின்றனர். அந்த வகையில் ”தாராள பிரபு” திரைப்படம் மலேசியாவில் திரையிடப்படுகிறது. மக்கள் படையெடுத்து வருவதால் தினமும் காட்சிகள் அதிகரிக்கப்படுகிறது.
ஜீலை 13 அன்று 3 காட்சிகள் தொடங்கி இன்று ஜீலை 17 , 8 காட்சிகள் திரையிடப்படுகின்றன. இந்தச் செய்தியை மலேசியா தமிழ் திரையுலகம் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது. இதற்கு நடிகர் விவேக் இது உண்மையெனில் மகிழ்ச்சியே! என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்திலும் வரும் ஆகஸ்ட் முதல் திரையரங்குள் திறக்கப்பட உள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இது உண்மையெனில் மகிழ்ச்சியே!! https://t.co/bsL49q07JA
— Vivekh actor (@Actor_Vivek) July 17, 2020