November 30, 2020

இசைப்புயலுடன் தனுஷ் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!!

தனுஷ் இந்த ஆண்டு ஜகமே தந்திரம், கர்ணன், அட்ராங்கி ரே திரைப்படங்களிலும் சன் பிக்ச்சர்ஸின் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது அட்ராங்கி ரே ஹிந்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில், பூஷன் குமார், கிருஷண் குமார், அருணா பாட்டியா, ஹிமான்சு சர்மா, ஆனந்த எல்.ராய் ஆகியோரின் இணைத் தயாரிப்பில், ஹிமான்சு சர்மா வசனத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலிகான் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். இது தனுஷ் நடிக்கும் மூன்றாவது இந்திப் படமாகும்.

இதற்கிடையே இன்று தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், எங்கள் இசைப்புயலுடன் ஒரு பாடலைப் பாடியும், கொஞ்சம் அரட்டை அடித்தும்” என்றும் பகிர்ந்துள்ளார்.

%d bloggers like this: