October 26, 2020

இரண்டாம் ஆண்டில் தனுஷின் வடசென்னை!!! நினைவுகளைப் பகிர்ந்த தனுஷ்!!!

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வட சென்னை. அதிரடி குற்றப்பின்னனியை மையமாக கொண்ட இந்த திரைப்படத்தில் தனுஷ் அன்பு கதாப்பாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றார். வட சென்னையின் இயல்பு வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பதாக இந்தப்படம் அமைந்திருந்தது.

வேல்ராஜ் ஒளிப்பதிவில், சந்தோஷ் நாராயணன் இசையில், சந்தோஷ் கரண் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் மூலமும், தனுஷின் வண்டர்பார் பிலிம்ஸ், வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இணைந்து இந்தப் படத்தை ததயாரித்திருத்தது.

தனசுடன் இணைந்து ஆண்ட்ரியா, அமீர், ஐஸ்வர்யா ராஜேஸ், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், பவன் ஆகியோர் நடித்திருந்தனர். அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் ஆண்டு நினைவுகளை தற்போது தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனுஷ் தற்போது ஜகமே தந்திரம் திரைப்படத்திலும், அட்ராங்கி ரே திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் கலாநிதி மாறன் தயாரிப்பில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: