மிருகா படத்தின் பாடலை வெளியிடும் தனுஷ்!!!

ஜே.பார்த்திபன் இயக்கத்தில், பன்னீர் செல்வம் ஒளிப்பதிவில், அருள் தேவ் இசையில் ஸ்ரீகாந்த், ராய் லஷ்மி, தேவ் கில், நைரா ஷா ஆகியோர் நடிப்பில் விரைவில் வெளியீடு காணவிருக்கும் திரைப்படம் ’மிருகா’.
கோத்தகிரியில், இடுப்பானையில் திடீரென நுழைந்த காட்டுப் புலி மனிதனை வேட்டையாடத் துவங்குகிறது. அதற்கு பின்னர் நடக்கும் திக் திக் சம்பவங்களை நோக்கிக் கதை அமைந்திருக்கிறது. ஜாக்குவார் ஸ்டூடியோஸின் கீழ் வினோத் ஜெயின் தயாரிப்பில் இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதற்கிடையே மிருகா திரைப்படத்தின் பஃர்ஸ்ட் சிங்கிள் பாடலை தனுஷ் வெளியிட இருப்பதாக ஜாக்குவார் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளது.
முதல் பாடலாக வெளியாக இருக்கும் ‘ஐயெம் பேட் பாய்’ பாடலை ரஞ்சித் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர். வரும் ஜூலை 18ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்தப் பாடல் வெளியாகிறது. இதனை ஜாக்குவார் ஸ்டூடியோஸ் அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.
#Mirugaa Music Track Coming to Trap You ? ?#IAMBADBOY
will be Released by @dhanushkraja Sir,
On18/07/20 at 5PM.#IamBadBoysingle@ijaguarstudios @Act_Srikanth @iamlakshmirai @iamvinodjain @nareshjain2682 @mv_panneer @ArulDevofficial @_ShwetaMohan_ @ranjithkg @onlynikil pic.twitter.com/W4YQVWdGil— JaguarStudios (@ijaguarstudios) July 16, 2020