October 21, 2020

தமிழ்நாட்டு பாரம்பரிய உடையில் கலக்கும் தனுஷ்- அட்ராங்கி ரே படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான அட்டகாசமான புகைப்படங்கள்…

அட்ராங்கி ரே என்னும் பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து தமிழ்நாட்டு பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் நடிகர் தனுஷின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.

நடிகர் தனுஷ் தற்போது ஜகமே தந்திரம், கர்ணன், அட்ராங்கி ரே போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதில் அட்ராங்கி ரே என்பது பாலிவுட் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ், அக்ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் ஆகியோர் நடித்து வருகிறார்கள். சாரா அலி கான் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தை பூஷன் குமார், கிருஷன் குமார், அருணா பாட்டியா, ஹிமன்ஷு ஷர்மா, ஆனந்த் எல். ராய் ஆகியோர் டி சீரிஸ், கலர் எல்லோ புரொடக்சன்ஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் நிறுவனங்களின் மூலம் தயாரித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் இசை அமைத்து வருகிறார். இது தனுஷ் நடிக்கும் மூன்றாவது ஹிந்தி திரைப்பட மாகும். இந்த திரைப்படம் 2021ஆம் ஆண்டு காதலர் தினத்தில் வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படத்தில் நடிகர் தனுஷ் தமிழ்நாட்டு பாரம்பரிய உடையான வேட்டி சட்டையை அணிந்து இருக்கிறார்.

%d bloggers like this: