October 21, 2020

மீண்டும் இணையும் தனுஷ் அனிருத் கூட்டணி!!!

இளம் இசையமைப்பாளரான அனிருத் இன்று தனது 30வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தனுசின் 3 படத்தின் மூலம் தனது திரையிசைப் பயணத்தை தொடங்கிய அனிருத் இன்று முன்னனி இசையமைப்பாளராக வலம் வருகிறார். தனது முதல் படமான “3” திரைப்படத்தில் இடம் பெற்ற “வொய் திஸ் கொல வெறி” பாடல் பதிவை முதன் முறையாக யூடியூபில் பகிர்ந்து தமிழ் சினிமாவில் புது டிரெண்டிங்கை உருவாக்கினார். இந்த பாடல் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றார்.

தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்திற்கும், அனிருத்தின் டாக்டர் திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார் அனிருத்.

அனிருத்தின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று ரசிகர்களுக்காக சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறவனம். கொடி கட்டி பறந்த தனுஷ் அனிருத் கூட்டணி 2014 ஆம் ஆண்டு வெளியான “வேலையில்லா பட்டதாரி” திரைப்டபத்திற்கு பிறகு சிறிது காலம் பிரிந்திருந்தனர். தற்போது மீண்டும் தனுசும் அனிருத்தும் கலாநிதி மாறன் இயக்கப் போகும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர்.

தனுஷ் தற்போது ஜகமேதந்திரம், கர்ணன், அட்ராங்கி ரே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். கலாநிதி மாறன் இயக்கும் இந்தப் படம் தனுசின் 44வது திரைப்படமாகும். 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தனுஷ் மற்றும் அனிருத் இணைவதால் இந்த செய்தி ரசிகர்களிடையே புது உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

%d bloggers like this: