November 30, 2020

மாஸ்டர் இந்த நாளில் வெளியாகும் வாய்ப்பு இருக்கிறது… தனஞ்செயன் பேட்டி….

போஃப்தா பிலிம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் டீன், 2 முறை தேசிய விருது வென்ற தயாரிப்பாளர் போன்ற பல பரிமாணங்களைக் கொண்ட டாக்டர் ஜி தனஞ்செயன் அவர்கள் ஒரு வலைதள நிகழ்ச்சியில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அந்த நிகழ்ச்சியில் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு பற்றி இவர் தெரிவித்துள்ளார்.

சினிமா சென்ட்ரல் என்னும் யூடியூப் சேனலில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஒரு நிகழ்ச்சியில் டாக்டர் தனஞ்ஜெயன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியிள் கேட்கப்பட்ட பல கேள்விகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில முக்கியமான கேள்விகளுக்கு இவர் பதிலளித்தார்.

அந்த கேள்விகளுக்குள் “மாஸ்டர் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும்? அக்டோபர் 15 திரையரங்குகள் திறக்கப்பட்டதும் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகுமா?” என்ற கேள்வியும் கேட்கப்பட்டிருந்தது.

இந்த கேள்விக்கு டாக்டர் ஜி தனஞ்செயன் அவர்கள் ” என்னைப் பொறுத்தவரை அக்டோபர் 15 அல்லது நவம்பர் முதல் தேதியில் தமிழ்நாடு அரசு திரையரங்குகளை திறப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் உடனே தீபாவளிக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால் பொங்கலுக்கு வெளிவருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அப்படியே பொங்கலுக்கு வெளியானாலும் மாஸ்டர் திரைப்படம் ஒரு சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதாவது அந்தப்படம் குறைந்தபட்சம் 150 முதல் 200 கோடி வரை வசூலை எடுக்க வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட சூழல் எப்பொழுது வரும்?… இருக்கைகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை விதிக்கும் போது ஒரு திரையரங்கில் 500 இருக்கைகள் இருக்கும் பட்சத்தில் 250 இருக்கைகளில் மட்டுமே மக்கள் படம் பார்க்க முடியும்…..
உதாரணமாக பிகில் திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம். பிகில் திரைப்படம் 600 திரையரங்குகளில் வெளியாகும் பட்சத்தில் ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள் மற்றும் ஒரு நாளைக்கு 4 காட்சிகள் என்று எடுத்துக்கொண்டால்…4காட்சிகள் * 500இருக்கைகள் * 600திரையரங்குகள் என்று கணக்கிடும்போது ஒரு நாளைக்கு 12 லட்சம் பேர் இந்த படத்தை பார்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அப்படி ஒரு நாளைக்கு 12 லட்சம் பேர் பார்க்க வேண்டும் என்றாள்…. தற்போதைய சூழலில் குறைந்தபட்சம் 90 திரையரங்குகள் , ஒரு திரையரங்கிற்கு 250 இருக்கைகள் என்று கணக்கிடும்போது காட்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நேரிடும். அதாவது நான்கு காட்சிகளுக்கு பதிலாக ஆறு காட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக 12 முதல் 13 லட்சம் மக்கள் வரை ஒரு நாளைக்கு பார்க்க முடியும். அப்படி பார்க்கும்போது தான் மாஸ்டர் படம் எதிர்பார்த்த அளவு குறைந்த பட்ச வசூலை யாவது எடுக்க முடியும்.
இந்த படத்தின் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர்களும் குறைந்த பட்சம் 150 முதல் 200 கோடி வரை வசூலை எதிர்பார்ப்பார்கள். டிக்கெட்டின் விலையை உயர்த்த முடியாது. ஏனெனில் தற்போது நிலவி வரும் காலகட்டத்தில் மக்களிடம் அதிகப்படியான டிக்கெட் விலையை எதிர்பார்க்க முடியாது. அப்படி பார்க்கும் போது தமிழக அரசு காட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்காமல் ஒரு நாளில் ஆறு காட்சிகளை நடத்துவதற்கு அனுமதி அளித்தாள்…900 திரையரங்குகளில் வெளியாகும் சூழ்நிலை இருக்கும் போது இந்த படம் எதிர்பார்த்த அளவு வசூலை ஈட்ட முடியும். அப்போதுதான் தயாரிப்பாளர்களுக்கும் நம்பிக்கை வரும். இப்படிப்பட்ட சூழ்நிலை வரும்போது கண்டிப்பாக இந்த படத்தை வெளியிடுவார்கள்.. அப்படிப்பட்ட சூழ்நிலை எப்போது வரும் என்று காத்திருந்து பார்க்கலாம்….” என்று பதிலளித்துள்ளார்.

இவரது பதிலை வைத்து பார்க்கும்போது மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

%d bloggers like this: