October 21, 2020

லட்சுமிராயின் முதல் வலை தொடரை பற்றிய விவரங்கள் வெளியாகி இருக்கிறது

நடிகை லட்சுமிராயின் முதல் வலைத்தொடர் பாய்சன் 2 வின் ட்ரெய்லர் இன்று சமூக வலை தளங்களின் வாயிலாக வெளியாகி இருக்கிறது.

பாய்சன் என்பது பதினோரு தொடர்களைக் கொண்ட ஒரு வலைத்தொடர். இது ஜி5 வில் ஒளிபரப்பாகியது. அதிரடி காட்சிகள் நிறைந்த குற்ற பின்னணியை கொண்ட திரில்லர் வகையை சேர்ந்த இந்த தொடரை ராகுல் அவர்கள் இயக்கியிருந்தார். சிராஜ் அஹமது அவர்களின் எழுத்திற்கு அர்பாஸ் கான் ரியாசென் மற்றும் பலர் சிறப்பாக நடித்திருந்தார்கள்.

ஒருவர் செய்யாத குற்றத்திற்காக தண்டனையை அனுபவித்து முடித்து விட்டு அதற்கு பழி வாங்க வேண்டும் என்பதற்காக கோவா செல்கிறார். அதே கோவாவிற்கு ஒரு குற்றவாளியை பிடிப்பதற்காக ஒரு டிஎஸ்பி அதிகாரி செல்கிறார். இந்த மூவருக்கும் நடக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வலை தொடர் தான் பாய்சன். இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பாய்சன் 2 வலைத்தொடர் வெளியாக இருக்கிறது.

விஷால் பாண்டியாவின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் இந்த பாய்சன் 2 வலை தொடரில் முதல்முறையாக அப்தாப் சிவதாசனி,ராய் லட்சுமியும் நடிக்க இருக்கிறார்கள்.இந்த தொடர் வரும் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி அன்று இது ஜீ 5 வில் ஒளிபரப்பாக தொடங்கும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. வினாயக் ஜெயின் மற்றும் அமித் கே பர்கவா ஆகியோர் இணைந்து பனோரமா என்டர்டெயின்மென்ட் மற்றும் பாம் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் இந்த வலைத்தொடரின் டிரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.


%d bloggers like this: